na

ஆனைக்கோட்டைஇணையத்தள வாசகர்கள்,  இணைய இயக்குனர்கள் அனைவருக்கும்  நத்தார்   வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் ஆனைக்கோட்டைஇணையத்தளம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றது.

கிறிஸ்துமஸ் பெயர் சூட்டியது யார்:ஆசியாவிலுள்ள சிறிய நாடான இஸ்ரேலில் ஜெருசலேம் நகரில் பெத்லகேம் என்னும் இடத்தில் இயேசு பிறந்தார். அவர் பிறந்த டிசம்பர் 25ம் நாள் பற்றிய விபரம், கி.பி.154ல், திருத்தந்தை ஜுலியசால் முதன்முதல் அறிவிக்கப்பட்டது. கிறிஸ்துமசை பிரெஞ்சு மொழியில், “நோயல்’ ஜெர்மனியில், “வெய்நேக்ஷன்’ ஸ்பெயினில் “நேவிடட்’ , ஸ்காட்லாந்தில்,” யூல்’ , இத்தாலியில், “நாடோல்லே’ என்று அழைப்பர். அமெரிக்காவைச் சேர்ந்த “டே’ என்ற பெண்மணி தான், இயேசு பிறந்தநாளுக்கு “கிறிஸ்துமஸ்’ என்று பெயர் சூட்டினார்.

 

1700 மொழிகளில் பைபிள்:

பிப்லியா என்ற கிரேக்க வார்த்தையே “பைபிள்’ என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தமிழில் “வேதாகமம்’ என்பர். “பிப்லியா’ என்றால் “புத்தகம்’ அல்லது “பத்திரம்’ என்று பொருள். பத்திரம் போல் பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகம் என்ற பொருளில் இதைச் சூட்டியிருக்க வேண்டும். பைபிளை எழுதி முடிக்க 1200 ஆண்டுகள் ஆயின. வெவ்வேறு காலங்களில் 40 பேர் இதை எழுதியுள்ளனர். இதில் பலரது பெயர் கூட தெரியவில்லை. இதை பழைய, புதிய ஏற்பாடு என இரண்டாகப் பிரித்தனர். இரண்டிலும் 1189 அதிகாரங்களும், 31ஆயிரத்து 102 வசனங்களும் உள்ளன. பைபிள் புத்தகத்தில் ஆரம்பத்தில் வசனங்கள் பிரிக்கப்படவில்லை. கி.பி.1250ல் முதன் முதலாக வசனங்களாகப் பிரித்து எண் கொடுத்தனர். கார்டினால் ஹ்யூகோ என்பவர், லத்தீன் மொழி பைபிளில் இந்தப் பணியைச்செய்தார். இதையடுத்து 1553ல் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டன. கிரேக்க மொழியில் அதிகாரங்களைப் பிரித்தவர் ராபர்ட் ஸ்டீபன் என்ற அறிஞர்.உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம் பைபிள் மட்டுமே. 1685 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு பேசும் மொழியில் கூட பைபிள் உண்டு. உலகில் மிக அதிகமாக விற்பனையாவதும் பைபிள் தான். அது மட்டுமல்ல! செய்திகள் புத்தக வடிவில் வெளியான போது, முதன் முதலாக வெளியானதும் பைபிளே. முதன் முதலாக வெளியான பைபிள் புத்தகம், நியூயார்க்கில் உள்ள பொது இறையியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.பைபிள் முதன்முதலாக பலராலும் கையால் எழுதப்பட்டது. பைபிளுக்கு மட்டும் 24000 கையெழுத்து பிரதிகள் உள்ளன. இதையடுத்து, ஓமர் எழுதிய இலியட் காப்பியத்திற்கு 643

கையெழுத்து பிரதிகள் கிடைத்தன.

கிறிஸ்துமஸ் மரம்:

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் மரம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவே ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் “பிர்’ என்ற மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது. இருப்பினும், மரங்களில் இலைகள் மற்றும் மலர்களைக் கட்டி அலங்கரிக்கும் வழக்கம் இங்கிலாந்தில் தான் 1841ம் ஆண்டில் ஆரம்பித்தது. அல்பெர்டினால் என்ற அரசன் முதன்முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை நட்டார்.
அவனி வந்த வேந்தன்

*அன்னைமரி பாலனாய்அவனி வந்த வேந்தனே!
மண்ணகத்தில் உந்தனின் நன்மைகள் தான் பெருகின!
* மெய்மறையாம் கிறிஸ்துவம்அன்பைச் சொல்லும் தத்துவம்
ஒன்றிணைந்து வாழவேசொன்ன வார்த்தை நித்தியம்
* உரிமை வாழ்வு வாழவேஉரைத்திட்ட போதகம்
காலமெல்லாம் உணர்த்திடும் பாடமாக அமைந்ததே!
*பிறர்நேசத் தன்மை தான்உறவின் உண்மை நெறியென
பாருக்கெல்லாம் பகர்ந்திட”பெத்தலை’யில் தோன்றினார்.
* “நற்செய்தி’ நல்கியநன்னெறியின் நாயகன்
மீட்பர் இயேசுபாலனை வணங்கி இன்று மகிழ்வோம்.

Comments