அனைக்

அமெரிக்காவில் நடைபெறவுள்ள, அதிபர் பதவிக்கான தேர்தலில், அமெரிக்கவாழ் இந்தியரான பாபி ஜிண்டால் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

லூசியானா மாநில ஆளுநராகப் பதவி வகித்து வரும் பாபி ஜிண்டாலின் பதவிக்காலம் 2015ம் ஆண்டுடன் முடிவடைகிறது. மூன்றாவது முறையாக இந்தப் பதவிக்கு அவர் போட்டியிட முடியாது.

எனவே திறமைசாலியான பாபி ஜிண்டால் அதிபர் பதவிக்கு போட்டியிடவும் அதிபராவதற்கான அனைத்து அரசியல் தகுதிகளும் அவருக்கு உள்ளது என அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த மேலவை எம்.பி.யான டேவிட் விட்டர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சமீபகாலமாக லூசியானாவில் கல்வி உதவி தொகை வழங்குதல், வருமான வரியை நீக்கியது, அதிபர் ஒபாமா கொண்டு வந்துள்ள மருத்துவ உதவி திட்டத்துக்கு எதிர்ப்பு போன்ற நடவடிக்கைகளால் அமெரிக்க மக்களிடையே பாபியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments