ஆனைக்கோட்டை
வணக்கம்!!!
ஆனைக்கோட்டை.கொம்
இணையத்தள இயக்குனர் நாயகம் அவர்கட்கு….

உங்கள் இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுவோம் மிகவும் விரும்பத்தக்க முறையிலும் பயனுள்ள வகையிலும் அமைந்துள்ளது.

உங்கள் இணையத்தளத்தில் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய உத்தியோக பூர்வ இணையத்தளத்தினை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். மேலும் உங்கள் பணி எம்பெருமானின் ஆலய வளர்சிக்கு உறுதுணையாக அமையும் என நம்புகின்றோம்.

அத்துடன் உங்கள் பணி சிறந்த முறையில் இருப்பதுடன் மென்மேலும் வளர்ச்சி பெற எம்பெருமான் திருவெண்காடு சித்தி விநாயகரின் திருவருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.

தரவு

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய உத்தியோக பூர்வ இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்சியுடன் அறியத்தருகிறோம். கீழ்காணும் ஆலய இணையத்தள முகவரியினை click செய்வதன் மூலம் ஆலய உத்தியோக பூர்வ இணையத் தளத்தினை பார்வையிட முடியும்.

http://www.thiruvenkadumandaitivu.com/

உங்கள் இணையத்துடன் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலய உத்தியோகபூர்வ இணையத்தின் கீழ் காணப்படும் logo வினை தயவுசெய்து இணைத்துக் கொள்ளுங்கள்.

Logo இணைத்துக் கொள்ள முடியாத பட்சத்தில் உங்களது இணையத்தள முகப்பு பக்கத்தில்
(HOME PAGE)உள்ள ஆலயங்கள் பகுதியில் திருவெண்காடு சித்திவிநாயகர் எனக்குறிப்பிட்டு எமது இணையத்தளத்தை இணைத்துக்கொண்டால் எம்பெருமானின் ஆலய வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்புகின்றோம். [தற்போது பஞ்சதள இராஐகோபுர கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.] நிச்சயம் சித்திவிநாயகரின் ஆலய வளர்சிக்கு இவ் உதவியினை வழங்குவீர்கள் என முழுமையாக நம்புகின்றோம்.

நன்றி.

மேலதீக தகவல் தொடர்புக்கு

00 33 (0)6 20 10 81 23

தகவல்

உங்கள் வாசகர்
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன்
ஆலய தர்மகர்த்தாக்கள்.
(மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம்) இறைபணிக்கு நாம் உதவ என்ன தவம் செய்தோமோ! தாங்கள் இப்பணியை எனக்கு தந்தமைக்கு தங்களுக்கும் இறைவனுக்கும் நன்றிகடன் பட்டுள்ளேன். மேலும் ஏதும் உதவிகள் தேவைப்படின் என்னால் முடிந்தவற்ரைச்செய்யக்காத்திருக்கிறேன். எல்லாம் சிறப்பாக அமைய என் ஆசிகழும் வாழ்த்துக்கழும்.

Comments