பாடும் பறவைகளே…..!

பாடும் பறவைகளே
பாவை தருமிந்த
பாக்களை எடுத்துச் சென்று
பாரெல்லாம் பறந்திடுவீர்…….!

ஆறு அறிவு என மனிதன்
ஆணவம் கொண்டலைகிறான்
ஏதறிவும் அவனிடமின்றி
ஏப்பம் விட்டு திரிகிறான்

நிலையற்ற இவ்வாழ்வை
kavi
நிஐம் என நினைத்திங்கு
நித்திலத்தை நாசமாக்கி
நீசனாகி நிற்கின்றான்

வஞ்சம் சூது ஏதுமின்றி
விந்தையான கதைபேசி
கொஞ்சி குலாவி திரிகின்றீர்
வஞ்சி அதைகண்டு
நெஞ்சம் விம்மி நிற்கின்றேன்…….!

அன்பு ஒன்றே உயிர்மூச்சாய்
அனைவரும் ஒன்றிணைந்த
ஆதிக்கம் இல்லாதொருலகு
அன்பால் அமைப்போம் என
எங்கும் சென்று சொல்லிடுவீர்…….!

ஏழ்மை,தாழ்மை தவிர்த்திங்குஇன மத பேதமின்றிய
இனிய உலகமதை காண்பதற்கு
இசை பாடி சென்றிடுவீர்
இங்கிதமாய் சேதி சொல்லிடுவீர்……!

வஞ்சம் போட்டி அற்றதொரு
வாழ்வொன்றே இங்கு வேண்டும்
வாழ்க்கை நன்றே வாழ்வதற்கே
வாழ்த்த வேண்டும் தலைமுறைகள்
என்று நன்கு சொல்லிடுவீர்……!
என் பாடும் பறவைகளே……..!

ரதிமோகன்
நன்றி
ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

Comments