sex1
வடக்கு மாகாணசபையின் கீழ் இயங்கும் அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தருக்கும் அவருக்கு கீ்ழ் பணியாற்றும் திருமணமான பெண் அலுவலா் ஒருவருக்கும் இடையேயான நெருக்கும் பெண்ணின் கணவனை உசுப்பி விட்டு அதனால் ஏற்பட்ட மோதலில் குறித்த பெண் அலுவலா் கணவரைப் பிரிந்து வாழ்வதாகத் தெரியவருகின்றது.

நிர்வாக உத்தியோகத்தா் குறித்த பெண் அலுவலரை சனிக்கிழமைகளில் அலுவலகத்தில் பணியாற்ற அழைத்து லீலைகள் புரிவதாகத் தெரியவருகின்றது.

இதற்கு அந்த அலுவலக உதவியாளரும் துணை நிற்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பெண் அலுவலரின் கணவா் வன்னிப் பகுதிப் பாடசாலை ஒன்றில் கடமை புரிவதாகவும் தெரியவருகின்றது.

இவருக்கு இனந்தெரியாத ஒரு நபா் தொலைபேசியில் தொடா்பு கொண்டு அலுவலகத்தில் குறித்த பெண் அலுவலருக்கும் நிர்வாக உத்தியோகத்தருக்கும் இடையேயான தொடா்பு பற்றித் தெரிவித்ததாகவும் இதன் பின்னா் கணவா் தனது மனைவியை அவதானித்து வந்த போது மனைவி தனது கைத் தொலைபேசியில் இரண்டு சிம் பாவித்து வருவதைக் கண்டு பிடித்து அந்தத் தொலைபேசியில் உள்ள தனக்கு தெரியாது இருந்த ஒரு சிம்மை இன்னொரு தொலைபேசியில் போட்டு அதை ஆராய்ந்த போது அந்தத் தொலைபேசிக்கு நிர்வாக உத்தியோகத்தரின் அழைப்புக்கள் அடிக்கடி வந்திருந்துள்ளன.

இதனால் கோபம் கொண்ட கணவா்,மனைவி சனிக்கிழமை அலுவலகத்திற்குச் சென்ற பின் அந்த அலுவலகத்திற்குச் சென்று நிர்வாக உத்தியோகத்தரைத் தரக்குறைவாகப் பேசி மனைவியைக் கடுமையாகத் தாக்கியதாகவும் தெரியவருகின்றது.

இச் சம்பவத்தால் அதிர்ந்து போன நிர்வாக உத்தியோகத்தா் தனது அறையில் இருந்து வெளியேறி ஓடிவிட்டதாகத் தெரியவருகின்றது. அங்கு பாதுகாப்புக்கு நின்ற உத்தியோகத்தா்கள் மனைவியைக் கணவா் தாக்கவிடாது தடுத்து நிறுத்தி வெளியேற்றியுள்ளனா்.

இருவரும் சென்ற பின்னா் நிர்வாக உத்தியோகத்தா் அங்கு வந்து பாதுகாப்பு உத்தியோகத்தா்களை இச் சம்பவம் தொடா்பாக யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம் என கெஞ்சியுள்ளார். அத்துடன் அவருக்கு விசுவாசமாக இருந்த அலுவலகப் பணியாளரும் குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தா்களை இது தொடா்பாக யாருக்கும் சொல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

கடந்த வாரம் இடம் பெற்ற இந்தச் சம்பவம் தொடா்பாக பெண் அலுவலரின் கணவா் அந்த அலுவலகத்தின் மேலதிகாரியுடன் தொடா்பு கொண்டு தகவலைத் தெரிவித்துள்ளதாகவும் இவரது லீலைகள் தொடா்பில் அலுவலகத்திலும் தெரிந்து விட்டதாகவும் தெரியவருகின்றது.

இதன் பின்னா் அலுவலகத்திற்கு வந்த குறித்த பெண் பணியாளா் தனது கணவா் நீண்டகாலமாக வன்னியில் வேலை செய்த விரக்தியிலேயே இவ்வாறான மனப்பிறழ்வுக்கு உள்ளாகி நடந்ததாகவும் தான் அவரை விவாகரத்துப் பெறப் போவதாகவும் சாதாரணமாகத் தெரிவித்துவிட்டு தற்போதும் வேலை செய்து வருகின்றார்.

குறித்த பெண் அலுவலருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் .நிா்வாக உத்தியோகத்தரும் திருமணமாகியவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments