5678687979809தேங்காய் பிடுங்குவதற்கு தென்னை மரத்தில் ஏறிய முதியவர் தென்னை மட்டை வெட்டும் போது தவறி வீழ்ந்து படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.

இதில் ஏழாலை மயிலங்காட்டைச் சேர்ந்த சின்னவன் இரத்தினம் (வயது- 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு தென்னைகளில் ஏறி தேங்காய் பிடுங்கி விட்டு மூன்றாவது தென்னையில் ஏறியபோதே குறித்த நபர் தவறிவிழுந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் இடைவழியில் உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

Comments