16567798181காணாமல் போன முதியவா் ஒருவா் காட்டுப்பகுதியில் 15 அடி பள்ளத்தில் விழுந்து கிடந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த தொலவத்தகே தொண் உபசேன என்ற 82 வயது முதியவரையே இவ்வாறு மீட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். நேற்று முதல் காணமல் போன இவரை குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடியும் அவரை கண்டுபிடிக்கவில்லை. பின்னர் நேற்று காலை கினிகத்தேனை தியநில்ல பகுதியில் அவரது செருப்பு, குடை, சாரம் என்பன காணப்பட்டதையடுத்து இது தொடர்பாக மஸ்கெலியா அதிரடிப் படை உயா் அதிகாரி சி.ஐ.குலந்துங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அதிரடிபடையினருடன் சென்று தேடுதல் மேற்கொண்ட போது 15 அடி பள்ளத்தில் காட்டுப்பகுதியில் முதியவா் விழுந்து கிடந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Comments