9509 (1)யேமனில் நிர்க்கதியாகத் தவித்த இலங்கையர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யேமனில் இடம்பெற்ற மோதலால் 45 இலங்கையர்கள் நிர்க்கதியாக தவித்ததோடு, இவர்களை நாட்டுக்கு அழைத்துவர வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் வௌிவிவகார அமைச்சும் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இதனையடுத்து சீன அரசின் உதவியுடன் குறித்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர முடிந்ததாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி கடந்த 8ம் திகதி 29 பேரும் நேற்று இரவு 16 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை யேமன் நாட்டில் மேலும் பல இலங்கையர்கள் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பான பகுதிகளிலேயே இருப்பதாகவும் வௌிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Comments