20150413_093614மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காந்திபுரம் பிரதான வீதியில் இன்று(13) பஸ் வண்டி ஒன்று குடைசாய்ந்ததில் 32பேர் காயமடைந்துள்ளனர். வாழைக்காலையாறில் இருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணம் செய்த பஸ்சின் சக்கரமொன்று கழன்றதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் மேலதிக சிகிச்சைக்களிற்காக மட்டக்ளப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மண்டூர் பொலிசார் விரைந்து சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பஸ் வண்டியில் 50இற்கும் மேற்பட்ட பிரயாணிகள் பயணித்திருந்தனர்.

Comments