1426144665-4792இளைஞர்களின் பாலியல் தொந்தரவால் திருநங்கை ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்தவர் திருநங்கை மதுமிதா. திருநங்கையான இவர் மீது இளைஞர்கள் சிலர் பாலியல் தொந்தரவுகள் கொடுத்து வந்தாக கூறப்படுகிறது.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீ காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருநங்கை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து பொலிஸார் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருநங்கைகள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து பொலிஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Comments