8855குடிப்பதற்கு அம்மா காசு தரவில்லையென்பதற்காக அலரிவிதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளான் யாழ் வாலிபன் ஒருவன். வடமராட்சியின் பருத்தித்துறையில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. எனினும், உடனடியாக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வாலிபன் தீவிரசிகிச்சையின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளான்.

22வயதான இந்த இளைஞன் மோட்டார்சைக்கிள் திருத்தகம் ஒன்றில் வேலை செய்து வருகிறான். கடந்த ஒருவாரமாக வேலைக்கும் செல்லவில்லை. இதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நண்பன் ஒருவனின் பிறந்தநாளிற்கு அனைவரும் மதுவிருந்து வைக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக அனைவரும் குறிப்பிட்ட தொகை பணம் கொண்டுவர வேண்டுமென கூறப்பட்டிருந்தது. இந்த வாலிபன் தனது தாயாரிடம் பணம் கேட்டுள்ளான். தாயார் கொடுக்க மறுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த வாலிபன் அலரிவிதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளான். எனினும், வீட்டிலிருந்தவர்கள் இதை அவதானித்ததால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு, வாலிபன் காப்பாற்றப்பட்டுள்ளான்.

Comments