5656பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை,11-05-2015 05:02 PM

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்கவினால் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் இதன்போது விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த சஜின் டி வாஸ் குணவர்தன, குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து எதிர்வரும் 20 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவர் விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் ஜனாதிபதி செயலக வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் சஜின்வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவர் விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில் ஜனாதிபதி செயலக வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் சஜின்வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments