1யாழ்ப்பாண வங்கி என்ற பெயரில் வணிக வங்கியொன்றை நிறுவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாங்க் ஒப் ஜப்னா என்னும் பெயரில் இந்த வங்கி இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தகர்கள் சிலர் இந்த வங்கியை அமைப்பது குறித்து மத்திய வங்கியுடன் விண்ணப்பித்துள்ளனர்.

பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்களே இவ்வாறு வங்கி ஆரம்பிக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மக்களுக்கு தேவையான வியாபார மற்றும் அபிவிருத்திக் கடன்களை வழங்குவது இந்த வங்கியின் பிரதான நோக்கமாகும்.

இலங்கையின் தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் வணிக வங்கியொன்று ஆரம்பிக்க 500 மில்லியன் பங்கு மூலதனம் இருக்க வேண்டும்.

வங்கிக்கு மத்திய வங்கி அனுமதியளித்தால் எதிர்வரும் மாதங்களில் வங்கியை நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

– See more at: http://www.newjaffna.co/moreartical.php?newsid=38916&cat=nnews&sel=current&subcat=2#sthash.oV48n4jU.gtzWtnxz.dpuf

Comments