1சுவிட்சர்லாந்து நாட்டில் அலுவலக நேரங்களில் சிகரெட் பிடிக்காத ஊழியர்கள் கூடுதலாக விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சிலருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கும் இருப்பதால், அவர்கள் அடிக்கடி வெளியே சென்று சிகரெட் பிடித்து வருகின்றனர். இதுபோன்று சிகரெட் பிடிக்கும் ஊழியர்கள் அடிக்கடி இடைவெளி எடுப்பதால், ஒரு நாளில் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை அலுவலக வேலையை கவனிக்க முடியாமல் போகிறது. இதனால் அலுவலக வேலைகள் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. இதுமட்டுமில்லாமல், சிகரெட் பிடிக்கும் ஊழியரின் ஆரோக்கியம் பாதிப்பது மட்டுமின்றி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாத பிற ஊழியர்கள் கூட இவர்களை பார்த்து அந்த தீயப் பழக்கத்திற்கு மாறுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சுவிஸில் உள்ள பேசல் நகரத்தை சேர்ந்த Schilling Rain என்ற நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Liestal என்ற நகரில் இயங்கி வரும் அந்த நிறுவனம் பள்ளி மாணவர்களுக்கு தேவையான தங்கும் விடுதிகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருகின்றன. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தான் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வேலை நேரங்களில் சிகரெட் பிடிக்காத ஊழியர்களுக்கு வழக்கமான விடுமுறையை விட கூடுதலாக விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும், எத்தனை நாட்கள் விடுமுறை மற்றும் எப்போது இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை. இந்த அறிவிப்பு தொடர்பாக நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களிடம் கருத்துக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், எதிர்வரும் கோடை விடுமுறைக்கு முன்னர் இந்த அறிவிப்பு குறித்து இறுதியான முடிவு எடுக்கப்படும் என Schilling Rain நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளா

Comments