13394111_1041790725912045_3787667426523773105_nலண்டனில் இருந்து வந்த ரேனுகரூபனுக்கு யாழ்ப்பாணத்தில் சிங்கள ஆதிக்க சக்தியால் நடந்த கொடூரம்..

யாழ்ப்பாணம் வரணியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் பிருத்தானியாவில் குடியுரிமை கொண்டவருமான வேலாயுதபிள்ளை ரேணுகரூபன் என்பவர் பிருத்தானியாவில் இருந்து தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் உள்ள வரணிக்குச் சென்ற வேளை கொடிகாமம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு கடும் சித்திரவதைகள் காயங்களிற்கு உள்ளாகியுள்ளார்..

தற்போது யாழ்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரேணுகரூபனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நிரந்தரமாக தடுத்துவைப்பதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக குடும்பத்தினரிற்கு தகவல்கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1981 ம்ஆண்டு பிறந்தரேணுகரூபன் யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி லண்டனில் அரசியல்தஞ்சம் கோரியவராவார். இவர் அங்கு நிரந்தர வதிவிட அனுமதி பெற்று வசித்து வந்தார். அவரது சகோதரி முன்னர் புலிகளின் குரல் வானொலியில் பணியாற்றினார் என்றும், அவர் இப்பொழுது பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ளார்.

மே 31 ம் திகதி வேலாயுதபிள்ளை ரேணுகரூபன் தனது வயதான பெற்றோரை பார்ப்பதற்காகவும், திருமணம் செய்வதற்காகவும் இலங்கைக்கு சென்றுள்ளார்.அவர் யூன் மாதம் முதலாம் திகதி மதியம்; 12.45 ற்கு கொழும்பு விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார். கொழும்பு விமானநிலையத்தில் அவர் குறித்த விபரங்களை பெற்றுக்கொண்ட பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை சாவகச்சேரி வரணியில் உள்ள குடமியன் என்ற இடத்திற்கு செல்வதற்கு அனுமதித்துள்ளனர்.

ரேணுகரூபன் தனது வீடுவந்து சேர்ந்த அன்றைய தினமே சீருடை அணியாத இரு இரண்டு நபர்கள் திடீரென மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். வாகனத்தை விட்டு இறங்கிய இருவரும் ரேணுகாரூபனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை கண்ட தாயார் மற்றும் மூத்த சகோதரி பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் ரேணுகாரூபனை கயிற்றால் கட்டியை அவர்கள் அவரை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, தாய் மற்றும் சகோதரி ரேணுகாரூபனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். ஆனால், அவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் ? எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

நம்பிக்கை இழக்காத அவர்கள் இறுதியாக ரேணுகாரூபனை கண்டுபிடித்துள்ளனர். ஆனால், மகனின் முகம், உடல் என பல இடங்களில் கொடூரமான காயங்கள் இருந்ததை கண்ட தாயார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ரேணுகாரூபனை பொலிசார் கொடூரமான சித்ரவதை செய்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தாயாருக்கு தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் 3 ம் திகதி ரேணுகரூபனின் வீட்டிற்கு சென்ற சீருடைஅணியாத இரு அதிகாரிகள் தங்களை பிரிட்டிஸ் தூதரகத்தினை சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஓருவர் தன்னை நியுயான் எனவும் மற்றைய நபர் தன்னை நிசான் எனவும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ரேணுகரூபனை துன்புருத்திய பின் மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார். துன்புறத்தப்பட்ட ஒரு கைதியை பொலிசார் எளிதில் மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்ப மாட்டார்கள். ஆனால், பிரித்தானிய வெளியுறவு துறை அலுவலகத்தின் நிர்பந்தம் மற்றும் பிரித்தானியாவில் ரேணுகாரூபனுக்கு பெருகி வரும் ஆதரவும் தான் தற்போது அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது.

மருத்துவமனையில் உள்ள ரேணுகாரூபன் தப்பிவிடக்கூடாது என அவரை மருத்துவமனையில் உள்ள படுக்கையில் இரும்பு கம்பியால் கட்டிப்போட்டு அவரை எந்நேரமும் இரண்டு பேர் கண்காணித்து வருகின்றனர்.

நல்லாட்சி என்று கூறி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் வரலாம் என கூவி அழைக்கிறது சிங்கள தேசம் . இதற்க்கு தானா அழைத்தார்கள்.. சிங்களம் எப்பொழுது தமிழனை எதிரியாக தான் பார்க்கும்.. இது சில தமிழர்களுக்கு புரியவில்லை.. நாட்டுக்கு செல்லவிருக்கும் மக்கள் அவதானமாக இருங்கள்..

ரேணுகாரூபனை விடுதலை செய்வதன் மூலம் தாய்நாட்டிற்கு திரும்பும் தமிழர்களின் பாதுகாப்பை இரு நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என்பதே ரேணுகாரூபனின் விடுதலைக்காக போராடி வரும் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Comments