0

 

போதைப் பொருள் மீட்கப்பட்ட இடத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் விஜயம் செய்துள்ளார்.

ஒருகொடவத்தை கொள்கலன் விடுவிப்பு பிரிவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் விஜயம் செய்துள்ளனர்.

பில்லியன்கள் பெறுமதியான சுமார் 100 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

போதைப் பொருட்களை மீட்ட அதிகாரிகளுக்கு நன்றி பாராட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கங்களின் சில சில குறைபாடுகளினால் போதைப் பொருள் பயன்பாட்டை முழுமையாக இல்லாதொழிக்க முடியாத நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுவோருக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிகாரிகள் மீது சில தரப்பினர் குற்றம் சுமத்தினாலும் அவர்கள் நேர்மையாக போதைப் பொருள் இல்லாதொழிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் அதற்கான சிறந்த உதாரணமே இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments