0-4

யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதி ஸ்ரீதர் தியேட்டருக்கு அருகில் உள்ள மின்மாற்றியின் மேலே உள்ள உயரழுத்த மின் கம்பி ஒன்று இன்று மாலை 3.45 மணியளவில் அறுந்து நடுத்தெருவில் விழுந்தது.

நிலத்தில் கம்பி அறுந்து விழுந்தவுடன் பாரிய சத்தமும், தீப்பொறிகளும் எழுந்தன.

அருகிலுள்ள கடையில் வேலை செய்யும் பெண்ணொருவர் இதனைப் பார்த்து திடீரென அதிர்ச்சி அடைந்து மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மின் விபத்தை அடுத்து சுமார் 20 நிமிடங்கள் குறித்த பாதை பொலிஸாரினால் தடை செய்யப்பட்டு இருந்தது.

உடனடியாக மின்சார சபையினர் சம்பவ இடத்துக்கு வந்து மின் இணைப்பைத் துண்டித்து திருத்த வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments