தமிழ்
ஈழம் எங்கள் தாய் நாடு .
இதயக் கோவிலில் அதன் வீடு.
வையக ஓரத்தில் ஒரு கூடு
அமைத்திட விழைந்ததால் விழுக்காடு..!

வன்னிப் பரப்பினில் பெரும் காடு
சிங்களன் பிடியினால் பெரும் கேடு.
கொண்டாடிக் களிக்குது அவன் நாடு.
திண்டாடித் தவிக்குது தமிழ் நாடு..!

வந்தாரை வாழ வைத்த பண்பாடு
அதனால் குலைந்தது சீர்கேடு.
இதுவே இன்றைய நிலைப்பாடு.
எழுந்து வா போடுவோம் எல்லைக்கோடு..!

வாழ்வே என்நாளும் கூப்பாடு .
சாவே எங்களின் சாப்பாடு.
தாயகம் மீட்பது கடப்பாடு
பிறக்கட்டும் எங்களுக்கு தனி நாடு!
19.02.2015

Comments