ஈழத்து பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.இ. மனோகரனுக்கு எங்கள் இறுதி வணக்கம்.

மகோனரன்
இந்திய கலைகளையும் கலைஞர்களையும் நமது ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருந்த காலத்தில் தனது பொப்பிசை பாடல்களால் கோலோச்சி நின்ற A.E.மனோகரன் அவர்கள்!!
1970 களின் நடுப்பகுதி எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது சிறுவயது மாணவப்பருவம்

யாழ் சம்பத்திரியார் கல்லூரி மைதானத்தில் பெரும் திரள் மக்கள் மத்தியில் A.E.மனோகரன் அவர்கள் பாடிக்கொண்டிருந்தது. பின்னர் யாழ் அரியாலை காசிப்பிள்ளை அரங்கம் இப்படி பல:::::

யாழ் தியேட்டர்களுக்கு முன்னால் உள்ள தேநீர் கடை ,புத்தகக் கடைகளில் இந்திய திரைப்பட பாடல் புத்தகங்கள் விற்பதுபோல் இவரது புகைப்படத்தை அட்டைப் படமாக கொண்ட பொப்பிசை பாடல் புத்தகம் விற்பனைக்கு தொங்கிக் கொண்டிருக்கும் அதில் ஒன்று வாங்கி பள்ளி நண்பர்களுடன் பாடியது ஞாபகத்திலுண்டு.
அதில் அவர் பாடிய பாடல்கள்!!
1)மால்மருகா எழில் வேல் முருகா நீயே;;;;
(2)இலங்கை என்பது என் தாய்த்திருநாடு:::::
(3)ஆய் ஊய் மீனாட்சியின் எலிகள் பட்டாளம் ::
(4)சில சில பாவையர் சில சில பார்வைகள் :::::
(5)வடை வடையென விற்று வந்தாள் வாயடி கிழவி ::::
(6)அன்பு மச்சாளே என்ரை ஆசைமச்சாளே நாடி வந்தேனே :::::
இப்படி அவர் பாடல்களை வரிசைப்படுத்தல் செய்யலாம்.

V.P.கணேசன் அவர்களின் புதியகாற்று திரைப்படத்தில் ஒரு காட்சியில் பொப்பிசை பாடல் ஒன்று படிய படி A.E.மனோகரன் அவர்கள்!

யாழ் வெலிங்டன் திரையரங்கில் இலங்கை சிங்கள திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட “யார் “என்ற படத்தில் சிலகாட்சிகளில் வருவது ஞாபகத்துக்கு வருகிறது.
“வாடைக்காற்று ” இரண்டு கதாநாயகர்களில் இவரும் ஒருவர்.

இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பான “பைலற் பிரேம்நாத் திரைப்படத்தில் L.R.ஈஸ்வரியுடன் இணைந்து ஒரு பாடல் பாடியிருப்பார் உதரெட்ட மெனிக்கே :::கோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பிலைதானே கலியாணம் கண்டியிலை வாங்கி வந்த காய்கறிகள்::

1985 காலங்களில் தமிழகத்தில் நடந்த கங்கை அமரன் இசைக்குழுவின் மேடையில் இந்த பாடல் (நமது இயக்கங்கள் ஒன்றாய் சேர்ந்த காலம்) விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகள் தம்பி பிரபா தலைமை கொண்ட விடுதலைப்புலிகள் நம்பியுள்ள நாடு நம்மதே நாடு காக்க இயக்கங்கள் சேர்ந்து ஒண்ணாச்சே::::

நீண்ட இடைவேளை பின் ஒரு பத்து வருடத்துக்கு முன் அவர் பாடிய வானொலியில் நான் தொகுத்து வழங்கிய பொப்பிசை நேரத்தில் தொடர்ந்து நேயர்கள் விரும்பிக் கேட்கின்ற பாடல் ‘யாழ்ப்பாணம் போக ரெடியா? மாம்பழம் தின்ன ஆசையா? என்ற பாடல்

பாரிஸில் 91 களில் என்று நினைக்கிறேன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு லூட்ஸ் மாதாவை பற்றியும் இயற்றி பாடியதோடு தனது பழைய பாடலான மால்மருகா எழில் முருகாவை புதிய வரிகளை சேர்த்து லண்டன் முருகா சுவிஸ் முருகா என்று பாடி மகிழ்ந்திருக்கிறார்.

இந்திய திரைப்படங்களில் தமிழ்,தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் சிவாஜி கணேசன்., கமல்,ரஜனி போன்ற பல பிரபலங்களுடன் 100 படங்களுக்குமேல் நடித்திருந்தாலும்.
1991 பாரிஸில் நானும் வேறுசில கலை நண்பர்களும் அவருடன் உரையாடும் போது அவர் சொன்னது இப்போ ஞாபத்திற்கு வருகிறது!
“என்னதான் நான் பல இந்திய படங்களில் நடித்தாலும் எனது பாடல்கள் தான் என்னை அங்கும் வாழ வைக்கிறது எங்கும் வாழவைக்கிறது”
உண்மைதான் அவரை இன்னும் பல நூற்றாண்டுகள் வாழவைக்கப்போவது அவரது பொப்பிசை பாடல்களே!!

“போய்வாருங்கள் எங்கள் பொப்பிசை சக்கரவர்த்தியே” ::::
எமது கண்ணீர் அஞ்சலி! K.P.L (22.01.2018)

Comments