கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில்  சாரதி ஒருவர் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீதி அபிவிருத்திப் பணியிpல் ஈடுபடும் கனரக டிப்பர் வாகனம் ஒன்றும் சிறிய ரக கன்டர் வாகனம் ஒன்றும் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.ஆனையிறவுப்பகுதி நோக்கிச் சென்ற டிப்பர் ரக வாகனமும் ஆனையிறவுப்பகுதியிலிருந்து பரந்தன் நோக்கி வந்த கன்ரர் ரக வாகனமும் ஒன்றையொன்று விலத்திச் செல்ல முற்பட்ட போது வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் விளைவாககவே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.இதன் போது சிறிய கன்ரர் ரக வாகன சாரதி பலத்;த காயமுற்ற நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று நண்பகல் 12.05மணியளவில் இடம்பெற்ற இந்தக் கோர விபத்தில் சாரதிகளும் வாகனங்களில் இருந்தவர்களும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.சமீப காலமாக இவ்வாறு ஏ.9 வீதியில் இடம்பெறம் வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் பலராலும் சுட்டிகாட்டப்பட்ட போதிலும், வாகனங்களின் வேகக்கட்டுப்பாடு தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தாமையே இவ்வாறு இடம் பெறும் தொடர் விபத்துக்களுக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.நேற்று இடம் பெற்ற இந்த விபத்து குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Comments