யுத்தத்தினால் அழிவடைந்த அரியாலை கிழக்கு பகுதியில் உள்ள ஆலயங்களை புனரமைத்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட இப்பகுதியில், மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டபோதும் இன்னமும் அப்பகுதியிலுள்ள ஆலயங்களை புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் அப்பகுதியிலுள்ள இந்து கிறிஸ்தவ ஆலயங்களை புனரமைத்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாலயங்களில் பல முற்றாக சேதமடைந்துள்ளதோடு ஒரு சில ஆலயங்கள் பகுதியளவிலும் சேதமடைந்தும் காணப்படுகின்றன. எனவே இவற்றை புனரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments